மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரமரை தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தி இருப்பதை வரவேற்று வழிமொழிவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரமரை தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தி இருப்பதை வரவேற்று வழிமொழிவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை வலியுறுத்தியிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று வழிமொழிகிறோம். இந்தியக்
கூட்டாட்சியை வலுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர்
வலியுறுத்தி இருப்பது போல ஆண்டுக்கு மூன்று முறை மாநிலங்களுக்கிடையிலான
கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில்
பிரதமரைக் கேட்டுக்கொள்கிறோம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2006ஆம் ஆண்டு அந்த கவுன்சிலின்
10 ஆவது கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் 10 ஆண்டுகள் வரை அந்தக் கூட்டம்
நடைபெறவில்லை. இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதற்குப் பிறகு, 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி அவரது தலைமையில் அக்கவுன்சிலின்
11 ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரின் வரலாற்றுச் சிறப்புக்குரிய இந்தக் கோரிக்கையை ஏற்று
உடனடியாக மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என
இந்தியப் பிரதமரை வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
எடுத்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முன்முயற்சிக்கு
அரசியல் வேறுபாடுகள் கடந்து அனைத்துக் கட்சிகளும் ஆதரவு நல்க வேண்டும் என்றும்
கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.