கன்னியாகுமரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை
ஒட்டி, பலத்த சூறை காற்றுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்
பரவலான மழை பெய்ததன் காரணமாக – மரங்கள் வேரோடு சாய்ந்தது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு அண்டை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நாகர்கோவில், ஆரல்வாய்மொழி மற்றும் பூதப்பாண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும், காலை பொழுதே தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
பலத்த சூறைக்காற்றும் வீசி வருவதால், இருசக்கர வாகனங்களில் சாலைகளில் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றால், ஏராளமான மரங்கள் முறிந்தும் சரிந்தும் உள்ளது. இதனால், பொதுமக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளா, அஸ்ஸாம் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தென்மேற்கு பருவமழையை யொட்டி, சிவப்பு எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுவித்துள்ளது. இதேபோன்று தமிழகத்திலும், பல்வேறு மாவட்டங்களில் பரவலாகவும் சில மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது. அதுபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில், காலை முதலே
பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
கு. பாலமுருகன்







