முக்கியச் செய்திகள் தமிழகம்

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும்- தமிழ்நாடு முதலமைச்சருக்கு கேரள முதலமைச்சர் கடிதம்

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

முல்லை பெரியாறு அணை கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் இருந்தாலும் அந்த அணையின் பராமரிப்பு உள்ளிட்டவை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க கேட்டுக்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த கடிதத்தில்,  கடந்த சில நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையம் இடுக்கி உள்பட கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பினராய் விஜயன், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கனமழை இதுபோன்று தொடர்ந்தால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் மிகவேகமாக உயரும் எனவும் தனது கடிதத்தில் கேரள முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சூழிலில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள பினராய் விஜயன், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை எதிரொலியாக,  முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைத்து பாதுகாப்பான அளவிற்கு நீர் மட்டத்தை பராமரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  இந்த விஷயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தனது கடிதத்தில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

முல்லைபெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதை கருத்தில்கொண்டு, அணையின் நீர் வரத்தைவிட அதிக அளவு நீரை அணையிலிருந்து வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரையோரம் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், முல்லைப்பெரியாறு அணையியிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக கேரள அரசுக்கு தகவல் தெரிவிக்குமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில்  கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நீர் நிலைகள் மீட்டெடுக்கப்படும்! – கமல்ஹாசன்

Jayapriya

ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு கிடுக்கிபிடி – பள்ளிக் கல்வித்துறை புது உத்தரவு

Web Editor

தொடர் மழை எதிரொலி: அரியலுர், கடலூர், விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

G SaravanaKumar