11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் உடனடி தேர்வு நடத்துவதில் பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாதவர்கள் 1,361 பேர் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல் உடனடி தேர்வு எழுத 151 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உடனடி தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ள 151 பேருக்கும் சென்னை நந்தனம் அரசுப்பள்ளியில் 5 நாள் பயிற்சி வழங்கப்படும் என்றும் பயிற்சியில் மாணவர்களை பங்கேற்க வைக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் நந்தனம் பள்ளிக்கு வந்து பயிற்சி பெற இயலாத மாணவர்களுக்கு, அவரவர் படித்த பள்ளிகளிலேயே பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை பயிற்சி வழங்கப்பட்ட பின் Instant Exam என சொல்லக்கூடிய உடனடி தேர்வு நடத்தப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் உடனடி தேர்வு நடத்துவதில் பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
– இரா.நம்பிராஜன்