சென்னை கோட்டத்தில் 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி – தெற்கு ரயில்வே தகவல்!

சென்னை கோட்டத்தில் 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக, தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது குறித்து நியூஸ் 7…

சென்னை கோட்டத்தில் 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக, தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது குறித்து நியூஸ் 7 தமிழ், விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது.

இதன் எதிரொலியாக, சென்னைக் கோட்ட ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி துரிதமாக நடைபெற்றுவதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, சென்னை கோட்டத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை உட்பட 16 ரயில் நிலையங்களில் 548 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.