தமிழ் மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் – மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம்!

மலேசியாவில் தமிழ் மொழி கற்பதை ஊக்குவிப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11வது உலகத் தமிழ் மாநாடு ஜூலை 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று நடைபெறுகிறது. 2ஆம் நாள் நிகழ்வில்…

மலேசியாவில் தமிழ் மொழி கற்பதை ஊக்குவிப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11வது உலகத் தமிழ் மாநாடு ஜூலை 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று நடைபெறுகிறது. 2ஆம் நாள் நிகழ்வில் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், மலேசியாவில் தமிழ் மொழி கற்பதை ஊக்குவிப்பதாகவும், பள்ளிகளில் தமிழை கூடுதல் மொழியாக மாற்ற முடியும் என நம்புவதாகவும் தெரிவித்தார். இந்திய ஆய்வியல் துறைக்கு கூடுதலாக 20 லட்சம் வெள்ளியை வழங்குவதாகவும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.