இன்ஸ்டாகிராமில் 60 விநாடிகள் அளவிலான ரீல்ஸ்களை மட்டுமே செய்ய முடிந்த நிலையில், தற்போது 90 விநாடியாக நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் தங்களுடைய பயனாளர்களுக்காக புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டே வருகிறது. அந்த வகையில், டிக்டாக்கிற்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட வசதிதான் ரீல்ஸ். இன்று பலரும் தங்கடைய தனித் திறமைகளை வெளிப்படுத்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தங்களது பயனாளர்களுக்கு ரீல்ஸ் தொடர்பான புதிய வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரம்பகட்டத்தில் 30 விநாடிகள் மட்டுமே ரீல்ஸ் வீடியோ செய்யும் வசதி இருந்தது. பின்னர், அந்த கால அளவு 1 நிமிடமாக மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தற்போது 90 விநாடிகள் அளவிலான ரீல்ஸ் வீடியோக்களை செய்யும் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமை அப்டேட் செய்வதன் மூலம் இந்த வசதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







