ஆரோக்கியமான உணவு இல்லாமல் ஆண்டுக்கு மில்லியன் மக்கள் இறக்கின்றனர்

இந்தியாவில் ஆரோக்கியமான உணவுகளை வாங்க முடியாமல் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் நோய்வாய் பட்டு உயிரிழந்து போவதாக சமீபத்திய கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.   பெரும்பான்மையான இந்தியர்களால் ஆரோக்கியமான உணவை வாங்க…

இந்தியாவில் ஆரோக்கியமான உணவுகளை வாங்க முடியாமல் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் நோய்வாய் பட்டு உயிரிழந்து போவதாக சமீபத்திய கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

பெரும்பான்மையான இந்தியர்களால் ஆரோக்கியமான உணவை வாங்க முடிவதில்லை. மேலும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் மோசமான உணவுப்பழக்கத்தால் நேரடியாக இணை நோய்களால் பாதிக்கப்பட்ட உயிரிழப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது. ஒரு சராசரி இந்தியரின் உணவில் பொதுவாக பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் முழு தானியங்கள் இல்லை. மீன், பால் மற்றும் சிவப்பு இறைச்சியின் நுகர்வு இலக்கிற்குள் உள்ளது. மேலும் அத்தியாவசிய ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் இல்லை என்றும் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு நபரின் வருமானத்தில் 63% ஐ தாண்டினால் ஆரோக்கியமான உணவு கட்டுப்படியாகாது. என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சிஎஸ்இ) மற்றும் டவுன் டு எர்த் பத்திரிகை வெளியிட்ட சமீபத்திய அறிக்கை, 71சதவீத இந்தியர்களால் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை என்றும் உலக சராசரி 42 சதவீதமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான உணவுப்பழக்கத்தால் ஏற்படும் நோய்களைக் குறிப்பிடும் ஆய்வில், சுவாசக் கோளாறுகள், நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.


பெரும்பான்மையான இந்தியர்களால் ஆரோக்கியமான உணவை ஏன் வாங்க முடியவில்லை? உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூற்றுப்படி, ஒரு நபரின் வருமானத்தில் 63% ஐ தாண்டினால் ஆரோக்கியமான உணவை வாங்க முடிவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

 

பரிந்துரைக்கப்பட்ட 200 கிராம் மற்றும் 168.7 கிராம் காய்கறிகளுக்கு எதிராக 20 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு 35.8 கிராம் பழங்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இதேபோல், அவர்கள் ஒரு நாளைக்கு வெறும் 24.9 கிராம் (இலக்கு 25%) பருப்பு வகைகளையும், 3.2 கிராம் (இலக்கு 13%) கொட்டைகளையும் உட்கொள்கிறார்கள் என தெரியவந்துள்ளது.


நாட்டில் சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், உணவு முறைகள் ஆரோக்கியமாக இல்லை என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. கூடுதலாக, நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்றுக்கொள்ள முடியாத அளவு நீடித்தாலும் கூட, அவை சுற்றுச்சூழலில் அதிகரித்து வரும் கோரிக்கைகளை உருவாக்குகின்றன,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.