முக்கியச் செய்திகள் இந்தியா

ஐஎன்எஸ் விக்ராந்த் வெறும் போர்கப்பல் அல்ல; கடின உழைப்பின் சான்று- பிரதமர் மோடி

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்க விக்ராந்த் போர்க்கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. 

 

 

இந்திய கடற்படைக்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர் கப்பல் கட்டப்பட்டு உள்ளது. ரூ.20 ஆயிரம் கோடி செலவில் முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே இந்த போர்கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேக் இந்தியா திட்டத்தின் கீழ், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வந்தது. கப்பல் கட்டும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதன் 4-வது மற்றும் இறுதி கட்ட சோதனை ஓட்டம் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இக்கப்பலை நாட்டுக்கு செப்டம்பர் 2-ந்தேதி அர்ப்பணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இதற்கான விழா நடைபெறுகிறது. அதன்படி பிரதமர் மோடி இன்று போர் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இப்போது வரை, வளர்ந்த நாடுகள் மட்டுமே இத்தகைய விமானம் தாங்கி கப்பல்களை உருவாக்கின. இன்று, இந்தியா இந்த பட்டியலில் இணைந்துள்ளது மற்றும் வளர்ந்த நாடாக மாறுவதற்கான மற்றொரு படியை எடுத்துள்ளது என்றார்.

உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் இவ்வளவு பெரிய விமானம் தாங்கி கப்பல்களை உருவாக்கும் நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது பெருமைப்பட கூடிய தருணமாகும். ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலால் இந்தியா  இன்று புதிய நம்பிக்கையால் நிரப்பியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், இந்திய கடற்படை, அனைத்து பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தொழிலாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

இந்த விமானம் தாங்கி  போர் கப்பலான விக்ராந்த் பெரியது மற்றும் பிரமாண்டமானது, தனித்துவமானது. விக்ராந்த் வெறும் போர்க்கப்பல் அல்ல. 21ம் நூற்றாண்டின் இந்தியாவின் கடின உழைப்பு, திறமை, தாக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சான்று என்று கூறினார்.

கேரளாவின் கடற்கரையிலிருந்து, ஒவ்வொரு இந்தியனும் இன்று ஒரு புதிய எதிர்காலத்தின் சூரிய உதயத்திற்கு சாட்சியாகிக் கொண்டிருக்கிறார்கள். இன்று நடைபெறும் இந்த விழா, உலக அரங்கில் இந்தியாவின் மன உறுதியை வலுப்படுத்துவதற்கான அழைப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram