முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தொழில்நுட்பம்

FASTag-ஐ குறிவைக்கும் நூதன திருடர்கள்; எச்சரிக்கை!


Arivazhagan CM

கட்டுரையாளர்

ஸ்மார்ட் வாட்ச் வடிவ டிஜிட்டல் ரீடர் மூலம் பாஸ்டேக்கில் இருந்து பணத்தை வழிப்பறி செய்யும் சம்பவங்கள் அரங்கேறுவதாகப் புகார்கள் எழுந்துவருகின்றன. யாரால்? எப்படி? நிகழ்த்தப்படுகிறது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

சுற்றுலா செல்லும் கார் மற்றும் சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகளை குறிவைத்து முன்பக்க கண்ணாடிகளைத் துடைப்பது போல நடித்து ஸ்மார்ட் வாட்ச் வடிவ டிஜிட்டல் ரீடர் மூலம் பாஸ்டேக்கில் இருந்து பணத்தை வழிப்பறி செய்யும் சம்பவங்கள் அரங்கேறுவதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, தொழில் நுட்ப ரீதியாக இவை சாத்தியமா? இல்லை போலியான பரப்புரையா என்பதனை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாஸ்டேக் குறித்த தேடலுக்குள் சென்றோம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொழில் நுட்ப ரீதியான தகவல்களைப் பெற, தொழில்நுட்ப வல்லுநர், கெனித்ராஜ் அவர்களுடன் பேசினோம். இது குறித்து அவர் தெரிவிக்கையில், எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் முடியும், தொழில் நுட்ப ரீதியாகச் சாத்தியமே எனக்கூறினார். சரி, விரிவாகத் தெரிந்துகொள்வோம் என்ற முயற்சியில், எப்படி சாத்தியம், இது பாஸ்டேக் நிறுவனத்துக்குத் தெரியாமல் நடக்கிறதா எனக் கேட்க முயன்றபோது தான் அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியாவில் போதுமான பாதுகாப்பு வசதி இல்லாததால், டோலை கடக்கும்போது மட்டுமல்ல காரை நிறுத்தி வைத்து இருக்கும்போது கூட பணத்தை எடுக்க முடியும் என்கிறார்.

இதற்குப் பெரிய அளவில் தொழிநுட்ட அறிவு இருக்க வேண்டும் என்று இல்லை, ஓரளவு அறிவியல் அறிவு இருந்தாலே போதும் என்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் கெனித்ராஜ். மேலும், 3000லிருந்து 5000 செலவு செய்தாலே ஸ்கேனிங் இயந்திரத்தை வாங்கிவிட முடியும் எனவும், அதன் வழியாகப் பணத்தை எடுக்க முடியும் என எச்சரிக்கிறார். டோல் (NETC FASTag) National Electronic Toll Collection அடிப்படையில் செயல்படுவதால், எந்த பேங்க் கணக்கிலிருந்து வேண்டுமானால், நிர்வகிக்க முடியும் என கூறுகிறார். 2013-ஆம் ஆண்டில் யுஎஸ்-ல் உள்ள ஒரு தனியார் நிறுவனம் இதனை நிறுப்பிது காட்டியுள்ளதாகக் குறிப்பிடும் அவர். 125 – 135 கிலோ ஹெட்ஸ் அளவு உள்ள குறைந்த அதிர்வெண் கொண்ட FASTag சில நிறுவனங்கள் பயன்படுத்துவதும், பணம் பிடிக்கும்போது எவ்விதமான ஓடிபியும், யூபிஐ உறுதி படுத்துதல் பின்னும் இல்லாததே இதுபோன்ற குற்றங்கள் நடக்கக் காரணம் என அவர் கூறுகின்றார்.

அண்மைச் செய்தி: ‘இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் வேண்டுமா?’

சரி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் எனக் கேட்ட போது, காரின் ஜீபிஎஸ்-ம் டோலின் ஜீபிஎஸ்-ம் இணைக்கப்பட்டுச் சரிபார்க்கப்பட வேண்டும், FASTag-ன் ரேஞ்-யை குறிப்பிட்ட டோல் கேட்டின் gps லொகேஷன் உடன் சரி பார்த்து பரிவர்த்தனை நடக்க வேண்டும். மேலும், ஆக்டிவ் வகை tag மற்றும் passive வகை tag இந்த இரண்டு முறைகளுக்கும் frequency distribution நான் லீனியர் முறையில் செயல் படுத்த பட வேண்டும் அப்போதுதான் இவற்றில் இருந்து தப்பிக்க முடியும். டோல் கேட்டு களை தவிர்த்து வாகனத்தின் இருப்பிடம், பயணித்த தூரம், பயண வழி ஆகியவை கணினி மயமாக மாற்ற பட்டு வாகன இயங்குதள அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க பட வேண்டும். ஏனெனில், தற்போது நடைமுறையில் உள்ள பல டோலில் வாகனம் கடந்தும் பல மணி நேரத்திற்கு பிறகுதான் மெசேஞ் வருகிறது. இதுபோன்ற சில சூழ்நிலைகளைப் பயன்படுத்தி பலர் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என அவர் தெரிவித்தார்.

  • நேர்காணல்: மு.சி. அறிவழகன், நியூஸ் 7 தமிழ்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நல்லாட்சிக் குறியீடு; நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடம்

G SaravanaKumar

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை கடந்தது

G SaravanaKumar

“அதிமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்”:எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Halley Karthik