முக்கியச் செய்திகள் தமிழகம்

நூதன முறையில் பணம் வசூல்: முன்னாள் போக்குவரத்து ஊழியர் கைது

கோவில்பட்டியில் உளவுப்பிரிவு உதவி ஆய்வாளர் என கூறி கடைகளில் பணம் வசூலித்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி தினசரி சந்தை பகுதியில் செயல்பட்டுவரும் அரிசி கடைக்கு நேற்று
மாலை வந்த ஒருவர் தன்னை உளவு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் என
அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் தனது கார் பழுதாகி நிற்பதாகவும் அதனை சரி
செய்ய ரூ.3000 வேண்டும் என கேட்டுள்ளார். அந்தப் பணத்தை நான் மீண்டும்
ஆன்லைனில் உங்களுக்கு திருப்பி தந்து விடுகிறேன் எனவும் கூறியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து கடைக்காரர் அவருக்கு பணத்தைக் கொடுத்து உள்ளார். ஆனால் அவரது
நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் உடனடியாக கோவில்பட்டி கிழக்கு காவல்
நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பந்தப்பட்ட கடைக்கு
வந்த போலீஸார் கடைக்காரர் கூறிய அடையாளங்களை கொண்டு விசாரணை நடத்தினர். இதில்அவர் கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் பகுதியில் உள்ள மற்றொரு கடையில் பணம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையின் பின்னர் அவரை கைது செய்தனர்.

அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா மாணிக்கவாசகர் நகரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்திஎன்பது தெரியவந்தது. மேலும் அவர் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளராக பணிபுரிந்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பணியிடை நீக்கம்
செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார்
அவர் வேறு எந்தப் பகுதியிலும் இது போன்று போலீஸ் என கூறி பணம் வசூல் செய்து
உள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் விரைவில் அதிரடி மாற்றம் – யாருக்கு எந்த துறை? | Exclusive

Jayasheeba

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனிஷ்வர் நாத் பண்டாரி வரும் திங்கட்கிழமை பதவியேற்பு

Halley Karthik

போலி கார்டை பயன்படுத்தி ஏடிஎம்மில் கொள்ளை

Gayathri Venkatesan