முக்கியச் செய்திகள் தமிழகம்

நிற்காமல் செல்லும் பேருந்துகள்: பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை அருகே, நிற்காமல் செல்லும் பேருந்துகளால் பள்ளிக்கு தினசரி செல்ல முடியவில்லை எனக்கூறி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய
அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள
பகுதிகளிலிருந்து தினமும் கண்ணமங்கலம் அரசு பள்ளி மற்றும் திருவண்ணாமலை வேலூர் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் காந்திநகர்
பகுதியில் இருந்து பேருந்தில் பயணம் செய்வது வழக்கம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால் அந்த பகுதியில் நகரப்பேருந்து தவிர மற்ற பேருந்துகள் நிற்பதில்லை,
காந்திநகர் பேருந்து நிலையத்தில் ஒரு சில நேரங்களில் நகரப் பேருந்துகள் கூட
நிற்பதில்லை என மேலும் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் மாணவிகள் அடிக்கடி
பள்ளி விடுமுறை எடுக்கும் சூழ்நிலை உருவாகிறது என கூறி பள்ளி மாணவ மாணவிகள்
மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் ஒன்றுகூடி சுமார் 200க்கும்
மேற்பட்டோர் வேலூர் திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் மறியல் செய்த பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த
கண்ணமங்கலம் போலீசார் ஆரணி தாசில்தார் போக்குவரத்து மண்டல மேலாளர் உள்ளிட்டோர்மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்பு மாணவர்கள் தங்களது சாலை மறியலை கைவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘கடல் மீன்கள்’ இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்!

Halley Karthik

சென்னை; மாத கணக்கில் பழுந்தடைந்து கிடக்கும் போக்குவரத்து சிக்னல்கள்

EZHILARASAN D

ஒமிக்ரான் பரவல்; கட்டுப்பாடுகளை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு

EZHILARASAN D