அகவிலைப்படி: 17% லிருந்து 31% உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக உயர்த்தி, பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியையும் உயர்த்தி…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக உயர்த்தி, பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியையும் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படுகிறது.

சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு ரூ.3000/-, ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500/- போனஸ், சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கு ரூ.1000/- போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அகவிலைப்படி உயர்வு மற்றும் பொங்கல் போனஸ் இரண்டிற்கும் ரூ.8894 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.