காஸாவில் பலியாகும் பச்சிளம் குழந்தைகள்… உலகம் அமைதியாக இருப்பது ஏன்? – இர்பான் பதான் கேள்வி

முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் காஸாவில் நடந்து வரும் வன்முறை குறித்தும் அதனை கண்டு உலகம் அமைதியாக இருப்பது குறித்தும் தனது கவலையை பதிவு செய்துள்ளார். அவர் தனது சமூக…

முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் காஸாவில் நடந்து வரும் வன்முறை குறித்தும் அதனை கண்டு உலகம் அமைதியாக இருப்பது குறித்தும் தனது கவலையை பதிவு செய்துள்ளார்.

அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

“எல்லா நாளும் 10 வயதுக்கு உட்பட்ட அப்பாவி குழந்தைகள் இறக்கிறார்கள்.  இந்த உலகம் அமைதியாக இருக்கிறது.  ஒரு விளையாட்டு வீரனாக, என்னால் பேச மட்டுமே முடிகிறது, ஆனால் உலக தலைவர்கள் ஒன்று கூடி இந்த அர்த்தமற்ற கொலைகளை நிறுத்த வேண்டிய உச்சகட்ட நேரம் இது” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

 

 

 

காஸாவில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.