முக்கியச் செய்திகள்

மாணவர்களுக்கு விலையில்லா டேட்டா கார்டு: முதல்வர் அதிரடி அறிவிப்பு

ஆன் லைன் வகுப்புகளில் பங்கு பெறும் மாணவர்களின் வசதிக்காக விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா காரணமாக கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வரும் நிலையில் அந்த வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்களுக்கு விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா பெறும் வகையில் எல்காட் நிறுவனத்தின் மூலம் விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.விலையில்லா டேட்டா கார்டுகளை நல்ல முறையில் பயன்படுத்தி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்

Advertisement:
SHARE

Related posts

”ஸ்டாலினின் பேராசையை நிராசையாக மாற்றுவோம்”- ஓ.எஸ்.மணியன்!

Jayapriya

தமிழ்நாட்டில் புதிதாக 2,312 பேருக்கு கொரோனா தொற்று

Ezhilarasan

டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிறது டெல்லி சட்டப்பேரவை சுரங்கப் பாதை

Gayathri Venkatesan

Leave a Reply