இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடியது. இந்திய கிரிக்கெட் அணி ஜப்பான் அணியுடன் மோதுவது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். இரு நாடுகள் உறவை வலுப்படுத்தும் வகையிலும், ஜப்பானிலும் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்தப் போட்டி நடைபெற்றது.
ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி ஜப்பானின் டொஷிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய இப்ப்போட்டி மோசமான வானிலை காரணமாக 5 ஓவர்களாக குறைக்கப்பட்டு 11:45 மணிக்கு தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி சார்பில் சஞ்சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் ஷர்மா டக் அவுட் ஆனார். இதனியடுத்து இரண்டாவது ஓவரில் சஞ்சாம்சனும், மூன்றாவது ஓவரில் இஷன் கிஷனும் அவ்ட் ஆக இந்திய அணி தடுமாரியது. இதனையடுத்து வந்த கேப்டன்ம் ஷ்ரேயஸ் ஐயர் நிதானமாக ஆடி 12 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த நிலையில் 5-வது மற்றும் கடைசி ஓவரில் ஆடாமிழந்தார். இறுதியில் இந்திய அணி 32 ரன்கள் எடுத்த நிலையில் தில்க் வர்மா ஒரு ரன்னும், ஷிவம்தூபே ர்ன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இதனியடுத்து 33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜப்பான் அணி களமிறங்கியது. ஜப்பான் வீரர்கள் நிதானமாக தங்களது ஆட்டத்தை தொடங்கிய நிலையில் அக்ஸர் படேல் வீசிய முதல் ஓவரில் அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் லாக்லான் யமமோட்டோ-லேக் ரன் அவுட் ஆனார். இதனைத்தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் வீசிய 2-வது ஓவரில் இப்ராஹிம் தகாஹாஷி 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதேபோல 4-வது ஓவரில் அந்த் அணியின் கேப்டன் கெண்டல் கடோவாகி-பிளெமிங் 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால 4 ஓவர் முடிவில் ஜப்பான் அணி 25 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜப்பான் அணி 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.




