INDvsIRE : ஒரு ரன்னில் தோற்ற இந்தியா… தொடரை வென்ற அயர்லாந்து…!

அயர்லாந்திற்கு எதிரான 2 வது டி 20 போட்டியில் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடின. இதில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியாவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்திடம் இந்தியா தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற புள்ளி கணக்கில் அயர்லாந்து அணி கைப்பற்றியது. அயர்லாந்திடம் டி20 தொடரை இந்தியா இழப்பது இதுவே முதல் முறையாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.