#IndVsBan | தடுமாறிய வங்கதேச அணி | 149 ரன்களுக்கு ஆல் அவுட்!

இந்தியா வங்கதேசம் இடையிலான போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தப்…

#IndVsBan | Stumbling Vanketasa team - all out for 149 runs!

இந்தியா வங்கதேசம் இடையிலான போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியா 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது திணறியது. இதனைத் தொடர்ந்து மேலும் 3 விக்கெட்கள் அடுத்தடுத்தடுத்து சரியவே 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் அஸ்வின், ஜடேஜா இணை களமிறங்கியது.

இந்த இணை அதிரடியாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தியது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் சதம் விளாசி அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் 6-வது சதம் இதுவாகும்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் குவித்தது. வங்கதேசம் தரப்பில் ஹாசன் மஹ்முத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நஹித் ராணா மற்றும் மெஹிதி ஹாசன் மிராஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் களமிறங்கிய இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் 113, ஜடேஜா 86 ரன்கள் குவித்தனர்.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் விளையாட களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் சொற்ப ரன்களை எடுத்து திணறினர். அணியின் முன்னாள் கேப்டனான சாகிப் அல் ஹசனை தவிர அனைவரும் 25க்கும் குறைவாகவே ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தனர். இதன் மூலம் வங்கதேச அணி 149 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.