இந்தோனேசியா மதப்பள்ளி கட்டிட விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

இந்தோனேசியாவில் மதப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்த விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணமான சிடொர்ஜொ நகரில் அல் ஹொசின் இஸ்லாமிய மதப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதப்பாடம் பயின்று வந்தனர். கடந்த  29ம் தேதி வழக்கம்போல் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதையும் படியுங்கள் : புரோ கபடி | புனேரி பால்டன், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் வெற்றி!

இதில், மாணவர்கள் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள்ள சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.  காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாயமான 50க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், உயிரிழர்பபு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.