”சுதேசி 4ஜி சேவையானது சுயசார்பை பிரதிபலிக்கிறது” – பிரதமர் மோடி..!

சுதேசி 4ஜி சேவையானது சுயசார்பை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி இன்று  பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையை தொடங்கி வைத்தார்.  ஒடிசாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி,  நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு புதிதாக அமைக்கப்பட்ட 97,500 கைப்பேசி கோபுரங்களை  காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார்.

இதனை தொடர்ந்து இது குறித்து பேசிய அவர்,

“இந்தத் தொடக்க விழா, இந்தியாவின் சார்புநிலையிலிருந்து நம்பிக்கையை நோக்கிய பயணமாகும். மேலும் இது,  வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, நிதி மறுமலர்ச்சி மற்றும் சுயசார்பு என்ற தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. ‘சுதேசி’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முழுமையாக உருவாக்கப்பட்ட 4G சேவையானது,  டிஜிட்டல் இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் படியாகும், இது டிஜிட்டல் பிளவைக் குறைத்து கிராமப்புற சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது” பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.