“இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு, உலகச் சராசரியில் பாதியை விடக் குறைவாகவே உள்ளது” – பிரதமர் மோடி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு (Per capita carbon emission) உலகச் சராசரியில் பாதியை விடக் குறைவாகவே உள்ளது

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலகச் சராசரியில் பாதியை விடக் குறைவாகவே உள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி விஞ்ஞான பவனில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம்  சார்பில் செய்யப்பட்ட “சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தின் எதிர்காலம்” குறித்த சர்வதேச மாநாட்டைத் பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது பேசியவர், காலநிலை மாற்றத்திற்கான பொறுப்பு பெரும்பாலும் வளரும் நாடுகளின் மீது தவறாகச் சுமத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, பொருளாதார வளர்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் இணைந்தே பயணிக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது என்றார்.

அமெரிக்காவில் தனிநபர் கார்பன் உமிழ்வு 13.4 டன்னாகவும், சீனாவில் 8.9 டன்னாகவும் உள்ள நிலையில், இந்தியாவில் இது வெறும் 2.1 டன்னாக மட்டுமே உள்ளது என்ற புள்ளிவிவரத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 12 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் இந்தியா அபார வளர்ச்சி கண்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், பாரிஸ் COP21 மாநாட்டில் அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே நிறைவேற்றிய ஒரே ஜி20 நாடு இந்தியா மட்டுமே என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.