இந்தியாவில் அதிகரித்த சிறுத்தைகளின் எண்ணிக்கை – கணக்கெடுப்பில் வெளியான தகவல்!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் இந்திய வனவிலங்குகள் துறை வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 13,874 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளார். சிறுத்தைகள் கணக்கெடுப்பு பணியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு அறிக்கை…

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் இந்திய வனவிலங்குகள் துறை வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 13,874 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

சிறுத்தைகள் கணக்கெடுப்பு பணியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்படுகிறது.  இந்த வகையில், அண்மையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.  கணக்கெடுப்பின் அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று டெல்லியில் வெளியிட்டார்.

இதையும் படியுங்கள் : திமுக நிர்வாகி வெட்டி கொலை – குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் இந்திய வனவிலங்குகள் நிறுவனம் ஆகியவை மாநில வனத்துறைகளுடன் இணைந்து சிறுத்தைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தின.  சிறுத்தைகள் அதிகம் வாழும் பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலை, சிவாலிக் மலைகள்,  இமயமலை, கங்கை சமவெளி உள்ளிட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த கணக்கெடுப்பின் முடிவில்,  இந்தியாவில் 13,874 சிறுத்தைகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. அ திகபட்சமாக மத்தியபிரதேசத்தில் 3,907 சிறுத்தைகள் உள்ளன. இதனையடுத்து மகாராஷ்டிராவில் 1,985 சிறுத்தைகளும், கர்நாடகத்தில் 1,879 சிறுத்தைகளும்,  தமிழ்நாட்டில் 1,070 சிறுத்தைகளும் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு அறிக்கையின்படி இந்தியாவில் 12, 852 சிறுத்தைகள் இருந்தன குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.