”என்னை எதிர்த்து போட்டியிட ஸ்டாலின் தயாரா?”- அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை ராயபுரம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட ஸ்டாலின் தயாரா என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தொகுதிக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என்ற…

சென்னை ராயபுரம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட ஸ்டாலின் தயாரா என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.

ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தொகுதிக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என்ற ஆர்.எஸ்.பாரதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்றுவதால் தான் ராயபுரம் தொகுதியில் தொடர்ந்து தன்னை மக்கள் தேர்ந்தெடுப்பதாக குறிப்பிட்டார். திமுக கட்சியின் சொத்துக்கள் கூட திமுக குடும்பத்திற்கு தான் போய் சேருகிறது என குற்றஞ்சாட்டினார்.

ராயபுரம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட ஸ்டாலின் தயாரா என்றும் சவால் விடுத்துள்ளார். யார் வெற்றி பெறுவார் என்பதை மக்களே முடிவு செய்யட்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், ‘என்னை எதிர்த்து போட்டியிட்டால் தோல்வி அடைந்து விடுவார் என்று ஸ்டாலினுக்கு தெரியும், ராயபுரத்தில் மீண்டும் அதிமுக தான் வெற்றி பெறும்’ என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply