உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை விவகாரத்தில் இந்தியா கையாண்டு வரும் அணுகுமுறை பாராட்டுக்குரியது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுக்கத் தொடங்கிய பிறகு, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ் முதன்முறையாக நேற்று இந்தியா வந்தார். டெல்லியில் இன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ரஷ்யா – உக்ரைன் மோதல் விவகாரத்தில், இந்தியா மேற்கொண்டுள்ள அணுகுமுறை பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்தார்.
ஒரு தரப்புக்கு மட்டும் ஆதரவு எனும் நிலையை இந்தியா எடுக்காதது பாராட்டுக்குரியது என அவர் கூறினார். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவுடனான உறவுக்கு ரஷ்யா முன்னுரிமை அளித்து வருவதாகவும் செர்கி லாரோவ் தெரிவித்தார். தற்போதைய சூழலில், ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுக்கு எதிராக நிற்கலாம் என்றும் அவர் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








