மாணவர்கள் கொண்டாட்ட மனநிலையோடு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்வு எழுத உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்கள் பதற்றம் இன்றி தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். தேர்வு எழுதும்போது Copy அடிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட பிரதமர், என்ன தெரியுமோ அதனை முழு நம்பிக்கையுடன் எழுதுமாறு வலியுறுத்தினார்.
தேர்வுகளை கொண்டாட்ட மனநிலையோடு எதிர்கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அவ்வாறு எதிர்கொள்ள உங்களால் நிச்சயம் முடியும் என்று தெரிவித்தார். பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்தும் பாடம் குறித்து சக மாணவ நண்பர்களுடன் விவாதிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கிய அவர், இதன் மூலம், புரிதல் மேம்படும் என கூறினார்.
பெற்றோர் தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது என கேட்டுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தங்கள் எதிர்காலத்தை அவர்கள் சுதந்திரமாக முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








