19-வது ஆசிய போட்டிக்கான இந்திய மகளிர் கால்பந்து அணி அறிவிப்பு!

சீனாவில் நடைபெறவுள்ள 19-வது ஆசிய போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய மகளிர் கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி…

சீனாவில் நடைபெறவுள்ள 19-வது ஆசிய போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய மகளிர் கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் ஹாக்கி, தடகளம், கபடி, கிரிக்கெட், கால்பந்து உள்பட 40 வகையான போட்டிகள் அரங்கேறுகின்றன. அண்மையில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கால்பந்து அணி (ஆண்கள், பெண்கள்) பங்கேற்பது உறுதியானது. 

இந்நிலையில் இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ள 22 பேர் கொண்ட இந்திய மகளிர் கால்பந்து அணியை இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளார் தாமஸ் டென்னர்பி வெளியிட்டுள்ளார்.அதன்படி, ஸ்ரேயா ஹூடா, சௌமியா நாராயணசாமி, பாந்தோய் சானு, ஆஷா லதா தேவி, ஸ்வீட்டி தேவி, ரிது ராணி, தலிமா சிப்பர், அஸ்தம் ஓரான், சஞ்சு, ரஞ்சனா சானு, சங்கீதா பாஸ்ஃபோர், பிரியங்கா தேவி, இந்துமதி கதிரேசன், அஞ்சு தமாங், சௌமியா குகுலோத், டாங்மேய் கிரேஸ், பியாரி சாக்ஸா, ஜோதி, ரேணு, பாலா தேவி, மனிஷா, சந்தியா ரங்கநாதன் ஆகிய 22 பேர் இந்திய அணியில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.