29.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மீதம் உள்ள 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.   இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.  அதில் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் 2 போட்டிகளில் விளையாடத விராட் கோலி இந்த தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.  அதேபோல் முதுகு வலி காயத்தால் அவதிப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் எஞ்சிய தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் இந்த தொடரில் எஞ்சியுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணி இன்று (பிப்.10) அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி,

  • ரோஹித் சர்மா (கேப்டன்)
  • ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்)
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • சுப்மன் கில்
  • கே.எல். ராகுல்
  • ரஜத் படிதார்
  • சர்பராஸ் கான்
  • துருவ் ஜூரல்
  • கே.எஸ். பாரத்
  • ஆர். அஷ்வின்
  • ரவீந்திர ஜடேஜா
  • அக்சர் படேல்
  • வாஷிங்டன் சுந்தர்
  • குல்தீப் யாதவ்
  • முகமது சிராஜ்
  • முகேஷ் குமார்
  • ஆகாஷ் தீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading