தொடரும் இந்திய மாணவர்கள் மரணம் | ஓஹியோவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.   நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம்,  ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் உமா சத்ய சாய் காடே என்ற இந்திய மாணவி இறந்துவிட்டதாக…

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  

நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம்,  ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் உமா சத்ய சாய் காடே என்ற இந்திய மாணவி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.  மரணம் தொடர்பான போலீஸ் விசாரணை நடந்து வருவதாகவும்,  இந்தியாவில் உள்ள காடேவின் குடும்பத்தினருடன் இது தொடர்பில் இருப்பதாகவும் அது மேலும் கூறியது.  அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி சமூகத்தை பாதிக்கும் தொடர் சம்பவங்களில் இது சமீபத்தியது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்காவில் மொத்தம் 10 இந்திய வம்சாவளி மாணவர்களின் இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ட்விட்டர் பதிவில்,  உமா காடேவின் சடலம் விரைவில் இந்தியாவுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்படும் என  தெரிவித்துள்ளது.  மார்ச் மாதம்,  கொல்கத்தாவைச் சேர்ந்த கிளாசிக்கல் நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ், மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அதே மாதத்தில், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது மாணவர் படுகொலை செய்யப்பட்டு,  அவரது உடல் அமெரிக்காவில் உள்ள ஒரு காட்டுக்குள் காரில் வீசப்பட்டது.

பருச்சுரி அபிஜீத்தின் உடல் வளாகத்திற்குள் உள்ள ஒரு காட்டில் கண்டெடுக்கப்பட்டது. பர்டூ பல்கலைக்கழகத்தில் 23 வயதான இந்திய-அமெரிக்க மாணவர் சமீர் காமத்,  பிப்ரவரி 5 அன்று இந்தியானாவில் உள்ள ஒரு பகுதியில் இறந்து கிடந்தார்.  பிப்ரவரி 2 அன்று, வாஷிங்டனில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே நடந்த தாக்குதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 41 வயதான ஐடி நிர்வாகி விவேக் தனேஜா உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளானார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.