கனடா தலைநகரான ஒட்டாவா நகரில் உள்ள ராக்லேன்ட் பகுதியில் இந்தியர் ஒருவர், நேற்று கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை எனவும், ஆனால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் எனவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
“ஒட்டாவா அருகே உள்ள ராக்லேண்டில் கத்தியால் குத்தப்பட்டு இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். துயரத்தில் இருக்கும் உறவினர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க உள்ளூர் சமூக சங்கம் மூலம் நாங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளோம்” என்று கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.







