முக்கியச் செய்திகள் இந்தியா

இந்திய ரூபாய் மதிப்பு 2வது நாளாக வரலாறு காணாத வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2வது நாளாக வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது. இது 3வது முறையாக வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக சர்வதேச அரசியலில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாலும் அந்நிய செலவாணி வர்த்தகம் மிக மந்தாக நடைபெற்றது. அதன்காரணமாக அன்று நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 93 காசு சரிந்து 80.89 என்ற அளவில் சரிந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், வெளிநாட்டு சந்தையில் அமெரிக்க கரன்சியின் வலிமை, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், நிலையான கச்சா எண்ணெய் விலை ஆகியவையும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயை பாதித்துள்ளன.

அன்னிய செலவாணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு காலையில் 80.27ல் தொடங்கியது. இடைப்பட்ட நேரத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச வீழ்ச்சியாக 80.95 வரை கீழிறங்கியது.

இந்நிலையில், உலக சந்தைகளில் ஒட்டுமொத்தச் சரிவுக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் இன்று தொடர்ந்து 3வது நாளாக வீழ்ச்சியடைந்து, பலவீனமான நிலையில் வர்த்தகம் தொடங்கியது. இதில், மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 497 புள்ளிகள் குறைந்து 58,639 புள்ளிகளிலும், தேசிய பங்கு சந்தி நிப்டி 156 புள்ளிகள் குறைந்து 17,473 புள்ளிகள் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் குறைந்து 81.18ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்வால் 2வது நாளாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அதிகபட்ச வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

GOT-ஐ தொடர்ந்து, வருகிறது “ஹவுஸ் ஆப் ட்ராகன்”

EZHILARASAN D

இனவெறி சர்ச்சை: இங்கிலாந்து வீரருக்கு 8 போட்டிகளில் விளையாட தடை

Gayathri Venkatesan

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறாது

EZHILARASAN D