அபிஜித் தாஸ் என்ற இந்திய வம்சாவளி வழக்கறிஞர், அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனத்திடம் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் மோசடி செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.
அபிஜித் தாஸ் என்பவர் இந்திய வம்சாவளி வழக்கறிஞர் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கான முன்னாள் வேட்பாளரும் ஆவார். 50 வயதான இவர் கடந்த வாரம் பாஸ்டன் நகரில் ஃபெடரல் கிராண்ட் ஜூரியால் கைது செய்யப்பட்டார். அவர் தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து பணத்தை மற்ற கணக்குகளுக்குத் மாற்றியதாக மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
மேலும் தாஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு போலி கணக்குகளை வழங்கி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தாஸ் தனது வாடிக்கையாளரான இந்தியாவைச் சேர்ந்த நிறுவனத்தின் கணக்குகளில் இருந்து மற்ற கணக்குகளுக்கு 5 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர் எஸ்க்ரோ நிதியை மாற்றியுள்ளார் என கூறப்படுகிறது. இந்த பணத்தை அவர் தனது சட்ட நிறுவனத்திற்கும், சொந்தமாக கட்டப்பட்ட ஹோட்டலுக்கும், மற்றும் 2.7 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஃப்ளோரிடாவில் உள்ள வீட்டிற்கும் பயன்படுத்தியுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அபிஜித் தாஸ் மீதான குற்றச்சாட்டிற்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும், 250,000 டாலர்கள் அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிகிறது.







