சோமாலியாவின் கிழக்கு கரையோரப் பகுதியில் எஃப்.வி. ஒமாரி என்ற படகில் இருந்து 11 ஈரானிய மற்றும் 8 பாகிஸ்தானியர்களையும் கடல் கொள்ளையர்ளிடமிருந்து இந்திய கடற்படை மீட்டுள்ளது.
கடந்த 29-ம் தேதி சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதியில் இருந்து அல் நயீமி என்ற மீன்பிடிக் கப்பலைக் கடத்த ஆயுதம் ஏந்திய சோமாலியா கடற்கொள்ளையர்கள் 11 பேர் முயற்சி செய்தனர். அப்போது ரோந்துப் பணியில் இருந்த ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் துரிதமாக செயல்பட்டு ஈரானிய மீன்பிடி கப்பலை மீட்டது. அதிலிருந்த 19 பேரும் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாவர்.
அந்த வகையில், இரண்டாவது முறையாக மீண்டும் ஈரானை சேர்ந்த மற்றொரு கப்பலை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.
https://twitter.com/indiannavy/status/1753398656995303433
சோமலியாவின் கிழக்கு கடலில் ஈரான் நாட்டுக்குச் சொந்தமான எஃப்.வி. ஒமாரி என்ற மீன்பிடி படகு சென்றுள்ளது. அதனை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடிக்க முயற்சித்துள்ளனர். அப்படகில் ஈரான் நாட்டைச் சேர்ந்த 11 பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்த 8 பேரும் இருந்துள்ளனர். அப்போது இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் ஷர்தா போர்க்கப்பல் அவ்வழியாக எல்லைப் பாதுகாப்பு மற்றும்கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது.
அதிலிருந்த கடற்படை அதிகாரிகள், 7 சோமாலிய கடற்கொள்ளையர்களுடன் அவர்களின் படகை கைப்பற்றினர். சோமாலியர்களால் சிறைபிடிக்க முயற்சிக்கப்பட்ட படகிலிருந்த ஈரான் மற்றும் பாகிஸ்தனைச் சேர்ந்தவர்களை இந்திய கடற்படையினர் காப்பாற்றினர்.







