முக்கியச் செய்திகள் இந்தியா

உக்ரைன் சென்ற இந்திய விமானம் திருப்பி அனுப்பப்பட்டது

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் சூழலில் இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது போர் தொடுக்க அனுமதித்ததை அடுத்து அந்நாட்டு ராணுவம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மோசமான போர்ச் சூழல் காரணமாக உக்ரைனில் வாழும் இந்தியர்களை நாடு திரும்புமாரு மத்திய அரசு கடந்த வாரத்திலேயே கேட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் இன்று காலை உக்ரைன் மீதான போரை தொடங்கியது ரஷ்யா.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


போர் தொடங்கப்பட்ட சூழலில் அங்கு வாழும் இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஏர் இந்தியா விமானம் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது. ரஷ்யா, வான் வழி தாக்குதல் நடத்தக் கூடும் என்றும், ரஷ்ய ராணுவம் விமான நிலையங்களை கைப்பற்றக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது” எனவே ஏர் இந்தியா விமானத்தை திருப்பி அனுப்பியுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது. இதன் காரணமாக உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.


மேலும் உக்ரைனில் தற்போது ஏவுகனைத் தாக்குதல் நடப்பதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். செங்கிவ்கான் நகருக்குள் ராணுவ டாங்கிகள் நுழைந்திருப்பதாகவும், பெலாரஸ் வழியாக டாங்கிகள் நாட்டுக்குள் உட்புகுவதாகவும், ரஷ்ய ராணுவம் உக்ரைன் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடிகர் ‘பூ’ ராமுவுக்கு மாரடைப்பு; தீவிர சிகிச்சை

EZHILARASAN D

என்னா அடி! ஆஸி.யை பஞ்சராக்கிய பட்லர்

Halley Karthik

மக்களின் கருத்துகளை கேட்டு அறியுங்கள் – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுரை

EZHILARASAN D