முக்கியச் செய்திகள் இந்தியா

வளர்ச்சியை நோக்கி இந்திய பொருளாதாரம் பயணிக்கிறது- சக்திகாந்த தாஸ்

உள்நாட்டில் உற்பத்தி துறை, விவசாய துறை, சேவைத் துறையில் ஏற்பட்ட மாற்றத்தால் வளர்ச்சியை நோக்கி இந்திய பொருளாதாரம் பயணிக்கிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்ட முடிவுகளை வெளியிட்டு பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ரெப்போ ரேட் விகிதம் 35 புள்ளிகள் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இனி ரெப்போ ரேட் விகிதம் 6.25 % ஆக இருக்கும். கடந்த மே மாதத்தில் இருந்து 5 முறை ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்தி உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். மேலும் சக்தி காந்த தாஸ் கூறுகையில், சர்வதேச அரசியல் பொருளாதார காரணிகளால் இந்தியாவிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது. ரிசர்வ் வங்கி அனைத்து செயல்பாடுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவிலும் பொருளாதார வளர்ச்சியில் சிறிது தொய்வு நிலை காணப்பட்டது. இருந்த போதிலும் உள்நாட்டில் உற்பத்தி துறை, விவசாய துறை, சேவைத் துறையில் ஏற்பட்ட மாற்றத்தால் வளர்ச்சியை நோக்கி இந்திய பொருளாதாரம் பயணிக்கிறது.

அமெரிக்கா டாலருக்கு நிகரான மற்ற, உலக நாடுகளின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகின்றன. அதே சமயம் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்த அளவு சரிவை சந்தித்தது. மற்றொரு புறம், உலக நாடுகளின் பண மதிப்புகள் வீழ்ச்சியை சந்தித்தாலும், இந்திய ரூபாயின் மதிப்பு 3.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 % சதவீதமாக இருக்கும் என கண்டித்துள்ளது. இதற்கு முன்பு பொருளாதார வளர்ச்சி 7 % ஆக இருக்கும் என கணித்திருந்தது. பணவீக்க விகிதம் அக்டோபர் மாதம் 6.77 % ஆக இருந்தது. ரிசர்வ் வங்கி பணவீக்க விகிதம் அதிகரிப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறது. அடுத்த நிதியாண்டில் பணவீக்க விகிதம் குறையும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்தார்.

உலகெங்கும் பொருளாதார சரிவுகள் இருந்த போதிலும், இந்தியாவில் அதன் தாக்கம் பெரிதாக இல்லை. உள்நாட்டில் சில்லறை துறை வளர்ச்சி, நுகர்வோர் சந்தை அதிகரிப்பு, வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு, வேகமெடுத்த தொழில் துறை செயல்பாடுகளால் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது. அதே போல் வங்கிகள் வழங்கிய கடன் அளவு இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது எனவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram