முக்கியச் செய்திகள் தமிழகம்

தொகுதி நிலவரம் எப்படி இருக்கு… முதல்வர் ஸ்டாலினின் உரையாடல் வைரல்!

ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த திமுக வாக்குச்சாவடி முகவரிடம் தொகுதி நிலவரம் குறித்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொலைபேசி வழியாக கேட்டறிந்த உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வரும் 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், அங்குள்ள தனது கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களிடம் தொலைபேசி வாயிலாக கள நிலவரம் குறித்து கேட்டறிந்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அந்த வகையில், ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசிய உரையாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிப்ரவரி 14 ஆம் தேதி ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவரை தொடர்புகொண்ட ஸ்டாலின், வணக்கம்மா நான் ஸ்டாலின் பேசுறேன்… என்ன எப்படி இருக்கீங்க? தொகுதி நிலவரம் எப்படி உள்ளது என கேட்டுள்ளார். நீங்க போன் பண்ணுவீங்கனு நினைச்சு கூட பாக்கல எனவும், நடராஜா திரையரங்கம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பதாகவும், தொகுதி நல்லா இருக்கிறது என பெண் நிர்வாகி பதிலளித்துள்ளார்.

அங்கு பொறுப்பாளர் யார்? என்ற கேள்வி கேட்டு நல்லா பாத்துக்கோங்க…எல்லோரையும் கேட்டதா சொல்லுங்க என ஸ்டாலின் கூறியதற்கு, பொறுப்பாளர் பெயரை கூறியதுடன் நன்றி அண்ணா என தெரிவித்த பெண் நிர்வாகி, ஐயோ தளபதி போன் பண்ணாரு என கூச்சலிட்டு உற்சாகமடைந்துள்ள உரையாடல் பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram