முக்கியச் செய்திகள் தமிழகம்

இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனைகளற்ற ஆதரவு – கமல்ஹாசன் அறிவிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனைகளற்ற ஆதரவு அளிப்போம் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள்நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரிப்பது எனும் முடிவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆமோதித்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது வெற்றிக்காக நானும், எனது கட்சியினரும் உதவிகளை செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட தனது சொந்த தயரத்தையும் மீறி மக்கள் பணி செய்ய மீண்டும் தேர்தல் களத்தில் இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனை பாராட்டுவதாகவும், இந்த இடைத்தேர்தலில் மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருக்கு மநீம நிபந்தனைகளற்ற ஆதரவை அளிப்பது என முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்தியாவின் பன்மைத்துவமும், இறையாண்மையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகிறது. மொத்த தேசத்தையும் ஒற்றை பண்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்று துடிக்கிறார்கள். மக்களின் உணவு, உடை, மொழி, கலாச்சாரம் என ஒவ்வொன்றிற்குள்ளும் ஊடுருவ முயற்சிக்கிறார்கள் என கூறியுள்ளார்.

ஜனநாயக சக்திகளின் குரல்வளையும், கருத்துரிமையும் ஒடுக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சுதந்திரமாக செயல்பட விடாமல் கொல்லைப்புறம் வழியா நுழைந்து, மாநில உரிமைகளில் தலையிடுவதும், இடையூறு செய்வதும் தொடர்கிறது. இதில் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது.

எனவே நாம் அனைவரும் ஒருங்கிணைந்து மிகபெரிய வாக்கு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெறச் செய்து மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகினார் மியான்மர் வீரர்

Halley Karthik

அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

Arivazhagan Chinnasamy

நாடு முழுவதும் 15-20 லட்சம் குழந்தைகள் தெருவோரம் வசித்து வருகின்றனர்: உச்சநீதிமன்றம்

Halley Karthik