தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்தியாவின் வான்வெளியைப் பாதுகாத்து, தேசத்தின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் உறுதி செய்யும் இந்திய விமானப்படையின் வீரத் தளபதிகள், அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு இந்திய விமானப்படை தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக வானில் அசாத்திய துணிச்சலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றி வரும் நமது விமானப்படை வீரர்களின் தியாகமும், வீரமும் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கிறது. அவர்களின் அயராத சேவைக்கு இந்நன்னாளில் நெஞ்சார்ந்த வணக்கங்களைச் செலுத்துவோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




