உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து!

இந்தியா – நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாள், மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன்…

இந்தியா – நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாள், மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் இன்று தொடங்குவதாக இருந்தது. இதற்காக வீரர்கள் தயாராக இருந்தனர்.

முதல் முறையாக ஐசிசி நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் இதை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், இன்று காலை முதலே அங்கு மழை பெய்து வருவதால், போட்டி தொடங்குவதில் தாமதமானது. போட்டிக்கான டாஸ் இன்னும் போடப்படாத நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால், முதல் பாதி ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் மழை தொடர்ந்து பெய்துவந்ததால், முழு நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சவுத்தாம்டனில் அடுத்த 5 நாள்களுக்கு மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால, ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.