முக்கியச் செய்திகள் விளையாட்டு

இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் கடைசி டெஸ்ட்; 145 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொள்ளும் இந்தியா

இந்தியா, வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட்டில் 145 ரன்கள் என்ற எளிய இலக்கை எதிர்கொண்டு இந்திய அணி விளையாடிவருகிறது. 

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் அடித்தது. அந்த அணியில் மோமினுல் ஹக் மட்டுமே சிறப்பாக ஆடி 84 ரன்கள் அடித்தார். உமேஷ் யாதவ் மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினர்.

டாஸ் வென்று முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் சேர்த்தது. அதன் பின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்தியா 314 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வங்கதேசத்தை விட 87 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

87 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சில் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எனவே வெறும் 144 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்ற வங்கதேச அணி, 145 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்துள்ளது.

இந்த எளிய இலக்கை இந்திய அணி அடித்துவிடும் என ரசிகர்கள் கருதுவதால் எனவே 2-0 என வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும் என கூறுகின்றனர்.

அத்துடன் இந்த போட்டியில் வெல்வது மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அதிக சதவிகிதத்துடன் 2ம் இடத்தை இந்திய அணி பிடிக்கும் எனவும் எதிர்பார்கின்றனர்.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.எனவே இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரண்டாவது இன்னிங்சில் களம் காண்கிறது இந்திய அணி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மணிகண்டன் கைது அரசியல் உள்நோக்கம் இல்லை: அமைச்சர் விளக்கம்!

Gayathri Venkatesan

இலங்கை: பசில் ராஜபக்சேவை விமர்சித்த, 2 அமைச்சர்கள் பதவி நீக்கம்

Halley Karthik

இந்தியாவில் இதுவரை 8.7 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி!

Halley Karthik