“2025ம் ஆண்டு க்வாட் உச்சிமாநாட்டை இந்தியாவில் நடத்துவதில் மகிழ்ச்சி” – #PMModi

அடுத்த ஆண்டு க்வாட் உச்சிமாநாட்டை இந்தியாவில் நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘க்வாட்’ என்ற அமைப்பை உருவாக்கி…

India, USA, Australia and Japan ,Quad organization

அடுத்த ஆண்டு க்வாட் உச்சிமாநாட்டை இந்தியாவில் நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘க்வாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் இன்று (செப். 22) நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள் : Tirupati லட்டு விவகாரம் – 11 நாட்கள் விரதத்தை தொடங்கினார் பவன் கல்யாண்!

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், 

“3வது முறையாக நான் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், க்வாட் மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சியைத் தருகிறது. க்வாட் முதல் உச்சி மாநாடு முதன்முறையாக 2021ம் ஆண்டு பைடன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், குறுகிய காலத்தில் நம் ஒத்துழைப்பை ஒவ்வொரு திசையில் விரிவுபடுத்தியுள்ளோம். அதிபர் பைடன் உள்பட அனைத்து தலைவர்களுக்கும் வாழ்த்துகள். 2025ம் ஆண்டு க்வாட் தலைவர்கள் உச்சிமாநாட்டை இந்தியாவில் நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.