இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடிவருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள்…

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடிவருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா 28 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி ஷிகர் தவான்னுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். இவர்களில் விராட் கோலி 56 ரன்னிலும், ஷிகர் தவான் 98 ரன்னிலும் வெளியேறினர். அவர்களை அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் 6 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 1 ரன்னிலும் வெளியேறினர். கே.எல்.ராகுல், குர்னால் பாண்டியா முறையே 62, 58 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 318 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜோசன் ராய், பேர்ஸ்டோ அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்களது வலுவான பார்ட்னர்ஷிப்பை அறிமுக வீரரான பிரசீத் கிருஷ்ணா தகர்த்தனர். இவற்களை அடுத்து வந்த வீரர்கள் அடுத்துடுத்து சீரான இடைவெளியுடன் அவுட்டாகி வெளியேறினர். இதனால், இங்கிலாந்து அணி 42.1 ஓவர்களில் 251 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அணியில் அதிகபட்சமாக ஜோசன் ராய் 46 ரன்னும். பேர்ஸ்டோ 94 ரன்னும் அடித்தனர். இதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.