பயிற்சியாளர் உள்பட இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இந்தியா- இலங்கை இடையிலான ஒருநாள் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, இங்கிலாந்து தொடர் முடிந்து நாடு திரும்பிய இலங்கை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், பயிற்சியாளர் உள்பட இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வருகிற 13ஆம் தேதி நடைபெறவிருந்த முதல் ஒருநாள் போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 17ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







