சாலை குடிநீர், மின்சார வசதி இல்லாத மலை கிராமத்திற்கு பத்து கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேஸ்வரன் குறைகளை கேட்டறிந்தார்.
தருமபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி அருகேயுள்ள வனப்பகுதியில் ஆறு கிராமங்கள் உள்ளன. தங்கள் கிராமத்திற்கு குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேஸ்வரனிடம் மனு கொடுத்தனர்.
இதனையடுத்து, முறையான போக்குவரத்து வசதி இல்லாத அந்த கிராமங்களுக்கு, சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பார்வையிட்டார். அப்போது, பெரும்பாலும் விவசாயத்தை நம்பியுள்ள தங்களுக்கு, நிலத்தை உழுவதற்காக டிராக்டர் வாங்கித் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வெங்கடேஸ்வரன் உறுதி அளித்தார்.







