இங்கிலாந்து அணிக்கு 157 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3வது டெஸ்ட் போட்டு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர். இதில் கே.எல் ராகுல் கடந்த போட்டியை போல் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இவரைத்தொடர்ந்து ரோகித் சர்மாவும் 15 ரன்னிலும், கடந்த போட்டியில் அரைசதம் விளாசிய இஷான் கிஷன் 4 ரன்னிலும் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
இவர்களை தொடர்ந்து களமிரங்கிய கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை நாளா புறமும் சிதறடித்தார். அவருடன் கூட்டணி சேர்ந்த ரிஷப் பண்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆடிவந்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி 25 ரன்னில் வெளியேறினார். அடுத்தடுத்த வந்த வீரர்களும் சொறப ரன்னில் வெளியேற இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் சேர்த்தது. அணியில் அதிகபட்சமாக கோலி 77 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார்.







