இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக, தொடந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக, தொடந்து குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து இதுவரை 3,40,67,719 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 19,788 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 3,34,19,749 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். ஒரே நாளில் 144 பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,52,124 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுடன் 1 லட்சத்து 95 ஆயிரத்து 846 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 41 லட்சத்து 20 ஆயிரத்து 772 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 97 கோடியே 65 லட்சத்து 89 ஆயிரத்து 540 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.