பிரதர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 14-ல் இருந்து 114 ஆக அதிகரித்து உள்ளது என்பது நம்முடைய தடகள வீரர்களின் ஆழ்ந்த திறமை மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளது என பதிவிட்டு உள்ளார்.
30 தங்க பதக்கங்கள், 5 உலக சாதனைகள், 9 ஆசிய சாதனைகள் மற்றும் அறிமுக போட்டியாளர்கள் மற்றும் பெண் வீராங்கனைகளின் திறமையான செயல்பாடுகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி, விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடும் இளைஞர்களுக்கு இந்தியா ஆதரவும், உற்சாகமும் அளிக்கிறது என்றும் தெரிவித்து உள்ளார்.
இதில் அறிமுக போட்டியாளர்களாக கலந்து கொண்ட 61 பேரில் 36 பேர் பதக்கங்களுடன் நாடு திரும்பியுள்ளனர் என்றும் பெருமையுடன் சுட்டிக்காட்டி உள்ளார். 56 தடகள வீரர், வீராங்கனைகளில் 34 பேர் பதக்கங்களை வென்றுள்ளனர். அர்ப்பணிப்புடன் செயல்படும்போது எந்தவொரு கனவும் பெரியதல்ல. எந்தவொரு சவாலும் சிறந்ததல்ல என நம்முடைய வீரர், வீராங்கனைகள் நிரூபித்துள்ளனர். வந்து விளையாடுங்கள், புகழ் பெறுங்கள் என்று அவர் தெரிவித்து உள்ளார்.




