முக்கியச் செய்திகள் விளையாட்டு

இந்தியா- இங்கிலாந்து 3 வது டெஸ்ட் இன்று தொடக்கம்: அஸ்வினுக்கு வாய்ப்பு?

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்த நிலை யில், லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னி லை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, லீட்சில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று நடக்கிறது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும் கே.எல்.ராகுலும் சிறப்பான தொடக்கத்தை கடந்த போட்டியில் ஏற்படுத்திக் கொடுத்தனர். இந்தப் போட்டியிலும் அவர் கள் அசத்தலான தொடக்கத்தைத் தருவார்கள் என்று நம்பலாம். ஆனால், மிடில்வரிசை பேட்டிங் சோதிக்கிறது. புஜாரா, கேப்டன் விராத் கோலி, துணை கேப்டன் ரஹானே ஆகியோர் சொல்லிக் கொள்ளும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் விமர்சனத் துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

கடந்த போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, முகமது சிராஜ், ஷமி, இஷாந்த் ஆகியோர் மிரட்டும் வகையில் பந்துவீசினர். போட்டி நடக்கும் பகுதியில் வானிலை, வேகப் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுவதால், இந்தப் போட்டியிலும் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்பலாம். அஸ்வினுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்து அணியில், கேப்டன் ஜோ ரூட் சிறப்பான பார்மில் இருக்கிறார். மற்றவர்கள் பேட்டிங்கில் தடுமாறி வருகின்றனர். டாம் சிப்லிக்கு பதில் டேவிட் மலான், வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட்டுக்கு பதிலாக, ஷகீப் மமூத் அறிமுக வீரராக அடியெடுத்து வைக்க வாய்ப்பிருக்கிறது. கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

நாடு முழுவதும் 14 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு

Ezhilarasan

ஆந்திராவில் மர்மநோய்; ரத்த மாதிரிகளில் அதிக அளவு ஈயம், நிக்கல்!

Jayapriya

“காலா”, “அசுரன்” திரைப்படங்களில் நடித்த, நித்திஷ் வீரா கொரோனாவுக்கு பலி!

Vandhana