முக்கியச் செய்திகள் இந்தியா

உலக பொருளாதாரத்தில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது- பிரதமர் மோடி

உலக பொருளாதாரத்தில் இந்திய 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இந்த மாதத்திற்கான மனதின் குரல் இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது. இது 96வது மனதின் குரல் நிகழ்ச்சியாகும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், இன்று இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் போதனைகளை நினைவுகூரும் நாளாகும். உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இந்த ஆண்டு, ஜி20 குழுவின் தலைவர் என்ற மதிப்புமிக்க பொறுப்பையும் இந்தியா பெற்றுள்ளது. கடந்த முறையும் இதைப் பற்றி விரிவாகப் பேசியிருந்தேன். கடந்த காலத்தை கவனிப்பது நிகழ்கால மற்றும் எதிர்கால தயாரிப்புகளுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும்.

2022ம் ஆண்டில், நாட்டு மக்களின் பலம், ஒத்துழைப்பு, உறுதிப்பாடு அதிகமாக இருந்தது. 2022 உண்மையில் மிகவும் ஊக்கமளிக்கிறது. இந்த ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டு நாடு புதிய வேகத்தைப் பெற்றுள்ளது. 2022 என்பது இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானப் பணியான ஐஎன்எஸ் விக்ராந்தை வரவேற்பதையும் குறிக்கிறது. இந்தியா உலக பொருளாதாரத்தில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலகின் பல நாடுகளில் கொரோனா அதிகரித்து வருகிறது. எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும். பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்; கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக, சுகாதாரத் துறையில் பல்வேறு சவால்களை நாம் சமாளித்து வருகிறோம். பெரியம்மை மற்றும் போலியோ போன்ற நோய்களை இந்தியாவில் இருந்து ஒழித்து விட்டோம்.

அடல் பிஹாரி வாஜ்பாய் நாட்டிற்கு சிறப்பான தலைமையை வழங்கிய சிறந்த அரசியல்வாதி. ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் அவருக்கு தனி இடம் உண்டு. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் யோகா செய்தால், நல்ல பலன் கிடைக்குமென ஆய்வில் தெரியவந்துள்ளது. நோயாளிகள் தொடர்ந்து யோகா செய்வதால் நோய் மீண்டும் வருவது 18% குறைக்கப்படுகிறது. மருத்துவ அறிவியலில் , யோகாவும் ஆயுர்வேதமும் இப்போது ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சி மூலம் அங்கீகரிக்கப்படுகின்றன. பாரம்பரிய மருத்துவத்தின் வளர்ச்சிக்காக டெல்லி எய்ம்ஸில் ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டுள்ளதாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போதைபொருள் விழிப்புணர்வு பேரணி நடத்திய காவல் துறையினர்

G SaravanaKumar

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை-காவல் உதவி ஆய்வாளர் கைது

Web Editor

வாட்ஸ் அப் அதிகம் பயன்படுத்துபவரா நீங்க… எச்சரிக்கை… எச்சரிக்கை…

EZHILARASAN D