முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கடந்த மே மாதம் 4 லட்சத்துக்கும் அதிமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு இப்போது 40 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய லவ் அகர்வால் கூறியதாவது:
“நாடு முழுவதும் 111 மாவட்டங்களில் மட்டும்தான் தினமும் 100-க்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்றில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 96.9 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் இன்னும் கொரோனா பாதிப்பு என்பது ஒட்டுமொத்த அளவில் அதிகமாக உள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணிகளின் வேகம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. 8 நாட்களில் 4.61 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தினமும் அனைத்து மாநிலங்களுக்கும் 60 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளது. 18-44 வயதுடையவர்களுக்கு ஒரு தவணை தடுப்பூசி 15 சதவீதமும், 45-59 வயதுடையவர்களுக்கு ஒரு தவணை தடுப்பூசி 42 சதவீதமும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு தவணை தடுப்பூசி 49 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது.”
இவ்வாறு லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

’அந்த பத்திரிகையாளரோடு என் மகளை கைது செய்தது ஏன்?’- இளம்பெண்ணின் தாய் வேதனை!

Halley karthi

முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சிவகுமார் கோரிக்கை

Halley karthi

ஐஐடியில் நடந்த தற்கொலைகளை விசாரிக்க தனி ஆணையம்: தபெதிக போராட்டம்

Ezhilarasan