முக்கியச் செய்திகள் இந்தியா

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்-வாக்களிக்காமல் இந்தியா புறக்கணிப்பு

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே, 2009-ல் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார் எழுந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுதொடர்பாக, இலங்கைக்கு எதிராக இனப் படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

கடந்த 2012-2014ல், அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே ஆட்சியின்போது, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், அந்த தீர்மானங்கள் இரண்டு முறை தோல்வி அடைந்தன. இந்நிலையில் தற்போது ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது.

ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட போர்க்குற்ற தீர்மானம் மீது வாக்களிக்காமல் இந்தியா உள்பட 20 நாடுகள் புறக்கணித்தது.

சீனா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
தீர்மானத்திற்கு ஆதரவாக இங்கிலாந்து, அமெரிக்கா, அர்ஜென்டினா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மெக்சிகோ, நெதர்லாந்து உள்பட 20 நாடுகள் வாக்களித்தன.
இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட போர்க்குற்ற தீர்மானம் வெற்றிகரமாக நேற்று நிறைவேற்றம் செய்யப்பட்டது.

இதன்முலம், ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ தொடர்பான வரைவுத் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை விசாரித்து அதற்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று தீர்மானத்தில் உள்ள முக்கிய அம்சம் ஆகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: பழனிசாமி

G SaravanaKumar

வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்

EZHILARASAN D

பறந்துக் கொண்டிருந்த விமானம் மீது விழுந்த ஐஸ்கட்டி!

G SaravanaKumar